ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் நிறைய முயற்சி செய்து ஜெர்மனுக்கு படிக்கச் சென்றார். அங்கு எம்.எஸ்., ஒரு வருடம் சென்றபின் மீண்டும் இந்தியா திரும்பி வந்தார். அதன்பிறகு ஜெர்மன் போக பிடிக்கவில்லை என்று சொல்லி, இங்கு வேலை எதுவும் பார்க்காமல் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். நல்ல வேலை கிடைக்குமா? திருமண யோகம், எதிர்காலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், மதுரை

DIN

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி. லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் மறைந்திருக்கிறார். அவரோடு புதபகவான் இணைந்திருப்பது சிறப்பு. இதனால் நீச்சபங்க ராஜயோகம், புதஆதித்ய யோகம் ஆகிய யோகங்கள் உண்டாகின்றன. சுக பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று இருப்பது சிறப்பு. அதோடு பாக்கிய ஸ்தானத்திலும் குருபகவான் அமர்ந்து இருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று இருப்பதும் சிறப்பு. களத்திர நட்பு ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து தற்சமயம் தசையை நடத்துகிறார். தற்சமயம் சனிபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் அவருக்கு இந்த ஆண்டே படிப்புக்குத் தகுந்த வேலை உள்நாட்டில் கிடைக்கும். அடுத்த ஆண்டு திருமணம் கைகூடும். சர ராசிகள் வலுவாக உள்ளதால் வெளிநாடு செல்லவும் வாய்ப்பு உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT