ஜோதிட கேள்வி பதில்கள்

நான் ஏதாவது உப தொழில் செய்யலாமா? எனது உடல்நிலை எப்போது பரிபூரணமாக குணமடையும்? எப்போது சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிட்டும்? - வாசகர், குரோம்பேட்டை

DIN

உங்களுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி. லக்னம் மற்றும் ஆறாம் வீடான சேவை வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று சுகாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். புத ஆதித்யர்களை குருபகவான் பார்வை செய்கிறார். தற்சமயம் தர்மகர்மாதிபதியான சனிபகவான் பத்தாம் வீட்டில் சச மகா யோகத்தைப் பெறுகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் உபதொழில் செய்யத் தொடங்குவீர்கள். உடல் ஆரோக்கியமும் சீரடைந்து விடும். 2022 -ஆம் ஆண்டுக்குள் சொந்த வீடு கட்டுவீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT