ஜோதிட கேள்வி பதில்கள்

எங்கள் மகள் வழி பேத்தி பி.பார்ம்., படித்து வருகிறாள். தந்தையை விட்டுப்பிரிந்து தாயும் மகளும் எங்களுடன் இருக்கிறார்கள். எதிர்காலம் எவ்வாறு அமையும்? பிற்காலத்தில் தந்தை வழியில் ஏதும் உதவிகள் கிடைக்குமா? - வாசகர், திருப்பூர்

DIN

உங்கள் பேத்திக்கு மிதுன லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். லக்னம் மற்றும் சுகாதிபதி சுக ஸ்தானத்திலேயே ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் பெற்றுள்ளார். சுக ஸ்தானத்தில் சுக்கிரபகவான் நீச்சம் பெற்றிருந்தாலும், நீச்சபங்க ராஜயோகத்தைப் பெற்றிருக்கிறார். அதோடு இவர்களை அயன ஸ்தானத்தில் சனிபகவானுடன் இணைந்திருக்கும் சூரியபகவான் பார்வை செய்கிறார். தற்சமயம் குருபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அவருக்கு 23 வயது முடிந்தவுடன் சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கும். சனிபகவான் பாக்கியாதிபதியாகி அயன ஸ்தானத்தில் விபரீத ராஜயோகம் பெற்றிருப்பதால் சனி தசை மகிழ்ச்சியாகச் செல்லும். அந்த காலகட்டத்தில் படித்த நல்லவேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலத்தில் தந்தை வழி உதவி கிடைக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT