ஜோதிட கேள்வி பதில்கள்

தகுந்த வரன் அமையும்!

DIN


என் மகளுக்கு அரசு வேலை எப்பொழுது கிடைக்கும்? அவரது திருமணம் எப்பொழுது நடைபெறும்? அரசு வேலையில் உள்ள வரன் அமையுமா? எங்கள் குடும்ப எதிர்காலம் பற்றியும் கூறவும்?

-விட்டல் சிங், விழுப்புரம்.

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மிதுன ராசி, மிருக சீரிஷ நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான செவ்வாய் பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். 

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில், தைரிய, ஆறாம் வீட்டுக்கதிபதியான நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்கும் புத பகவானுடனும் (புத ஆதித்ய யோகம்), தொழில், லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவானுடனும், கேது பகவானுடனும் இணைந்திருக்கிறார். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். 

பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம்  வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றமர்ந்து, ஐந்தாம் பார்வையாக தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்), ராகு பகவானையும் பார்வை செய்கிறார். 

அரசு கிரகங்களான சூரிய, செவ்வாய், குரு, சனி பகவான்கள் வலுவாக உள்ளதால் அரசு அல்லது அரசு சார்ந்த வேலை இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கிடைத்துவிடும். வங்கி, காப்பீட்டுத் துறைகளிலும் முயற்சி செய்யலாம். இந்த கால கட்டத்தில் கணினி துறையில் வேலை செய்யும் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும். பாக்கியாதிபதி வலுத்திருப்பதால் உங்கள் குடும்ப எதிர்காலமும் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT