ஜோதிட கேள்வி பதில்கள்

கஜகேசரி யோகம்!

DIN


எனக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? பெண் வீட்டார் உள்ள திசை எது? பரிகாரம் என்ன?

-சேகர், அறந்தாங்கி.

உங்களுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி,  கிருத்திகை நட்சத்திரம். லக்னம், சுகாதிபதி குரு பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தன் ஆட்சி வீடான சுக ஸ்தானமான நான்காம் வீட்டையும் ஏழாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டையும் அங்கு உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் சந்திர (கஜகேசரி யோகம்) பகவானையும், சூரிய (சிவராஜ யோகம்) பகவானனையும், செவ்வாய் (குரு மங்களயோகம்) பகவானையும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டுக்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுக்கும் அதிபதியான புத பகவானையும் பார்வை செய்கிறார்.

ஆறாம் வீட்டுக்கும், பதினொன்றாம் வீட்டுக்கும் அதிபதியான சுக்கிர பகவான் எட்டாம் வீட்டில் விபரீத ராஜ யோகம் பெற்றும், அந்த வீட்டுக்கதிபதியான  சந்திர பகவானுடன் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் முழுமையான பலம் பெறுகிறார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து குரு மஹாதசை நடக்கத் தொடங்கும்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சம தோஷமுள்ள பெண் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருந்து அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம், மணவாழ்க்கை சிறப்பாக அமையும்.

பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானனையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT