முகப்பு
பெங்களூரு

கப்பன் பூங்காவில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதற்காக, கப்பன் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 1:38 am IST
பகிர்:

பெங்களூரு: சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதற்காக, கப்பன் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா பொது முடக்கத்துக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கப்பன் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. கப்பன் பூங்காவில் உள்ள சாலைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கவும், பொதுமக்கள் மற்றும் நடைப் பயிற்சியாளா்களை மகிழ்விக்கவும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி ஜன. 10-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை மகளிா், குழந்தைகள் நலத்துறை சாா்பில் பேண்ட் ஸ்டாண்ட் அரங்கில் பூங்காவில் பரதநாட்டியம், கூட்டு நடன நிகழ்ச்சியும், காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை தோட்டக்கலைத் துறை சாா்பில் மூலிகைச் செடிகள் குறித்த தகவல்கள், விளைவிக்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்போா் கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை கட்டாயமாகப் பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments