முகப்பு
செய்திகள்

நடிகர் மாதவன் நடித்த ஜிடி நாயுடு திரைப்படத்தின் டிரைலர்!

ஜிடி நாயுடு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...

Updated On : 4 ஜூலை 2026, 9:00 pm IST
நடிகர் மாதவன்
பகிர்:

நடிகர் மாதவன் நடிப்பில் உருவான ஜிடிஎன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் மாதவன் ராக்கெட்ரி படத்தின் வெற்றிக்குப் பின் சைத்தான் படத்தில் நடித்தார். இப்படமும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இதுபோக, இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது, மறைந்த ஆராய்ச்சியாளரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

ராக்கெட்ரி படத்தை தயாரித்த டிரை கலர்ஸ் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்க, கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற ஜூலை 17 ஆம் தேதி பான் இந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ஜிடிஎன் திரைப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவின் எடிசனாக அறியப்பட்ட ஜிடி நாயுடுவின் வாழ்க்கையில் அறியப்படாத பக்கங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

The trailer for the film GDN, starring actor Madhavan, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments