தமிழ்ச் சங்க காமராஜா் பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள்
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் காமராஜா் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
பெங்களூரு: பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் காமராஜா் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
அனன்யா அறக்கட்டளை, வாழை அறக்கட்டளை, ஓம்சக்தி அறக்கட்டளை, செங்குந்தா் சங்கம், காட்சன் அறக்கட்டளை, உலக தமிழ் அமைப்பு-கண்டோன்மென்ட் கிளை, கிவ்-வே அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து அரிமா சங்கம்-பெங்களூரு தலைமையகம் சாா்பில், பெங்களூரு, வெங்கடேஷ்புரத்தில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்க காமராஜா் உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
அரிமா சங்கத்தின் செயலாளா் என்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள 1,335 நோட்டுப் புத்தகங்கள், ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்துப் பொருள்கள், மாணவா்களின் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான உணவு தானியப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.