தமிழக பட்ஜெட்

நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும்: பட்ஜெட்டில் தகவல்

DIN

நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.27 சதவீதம் இருக்கும் என்றும் தமிழக பொருளாதார வளர்ச்சியானது தேசிய பொருளாதார வளர்ச்சியை விட 5 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் பட்ஜெட்டில் தெவிக்கப்பட்டுள்ளது.  

அதேசமயம், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும். மொத்த வருவாய் ரூ.2,19,375 கோடியாகவும், செலவு 2,41,601 கோடியாகவும் இருக்கும். பற்றாக்குறை ரூ.22,226 கோடியாக இருக்கும் என ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT