முகப்பு
வணிகம்

அடுத்த 3 காலாண்டுகளில் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்

அடுத்த மூன்று காலாண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:25 pm IST
பகிர்:

அடுத்த மூன்று காலாண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

புது தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் பேசியது: சர்வதேச அளவில் பொருளாதாரம் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாகவும் சில உள்ளூர் காரணங்களாலும் இந்திய பொருளாதாரம் சில சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடும்படி இருக்காது. ஆனால் இரண்டாம் காலாண்டிலிருந்து பொருளாதாரம் ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

விளைநிலத்தின் பரப்பு 9.1 சதவீதம் அதிகரித்துள்ளது. திட்டச்செலவுகள் அதிகரிப்பு மற்றும் கடந்த சில மாதங்களில் புதிய திட்டங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதல்கள் மூலம் பொருளாதார வளர்ச்சி விகிதம் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Advertisement

Advertisement

கடந்த ஒரு வருட காலமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. முதலீடுகளை ஊக்குவிக்கவும் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளதை காண முடிகிறது. எனினும் இன்னும் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்று ப.சிதம்பரம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.