பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாக!
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி, மாநிலத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விலகுகிறது.
கூட்டணி அரசியலில் இயக்கத்தின் வளர்ச்சி குறைவதாக நிர்வாகிகள் கருதுகிறார்கள். தனித்தன்மையோடு கட்சி செயல்பட வேண்டும் என விரும்புகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் வரும் வரை எங்கள் கட்சி தனித்தன்மையோடு செயல்பட்டு மீண்டும் அடித்தளத்தை பலப்படுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
இனி தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி. கூட்டணிக் கட்சிகளுடன் எந்த மனக்குமுறலும் இல்லை, கூட்டணியில் இருந்து நட்பு சக்தியாகவே விலகுகிறோம் என்று தெரிவித்தார்.