முகப்பு
வணிகம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் முதலீடுகளுக்கான வட்டி உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் முதலீட்டுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:30 pm IST
பகிர்:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் முதலீட்டுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வணிக வளர்ச்சித் துறை பொதுமேலாளர் செல்வன் ராஜதுரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பல்வேறு கால அளவுகளுக்கான முதலீட்டுக்குரிய வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இவ்வங்கியானது 91 நாள்கள் முதல் 10 ஆண்டுகளுக்கான முதலீடுகளுக்கு வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 91 நாள்கள் முதல் 179 நாள்கள் வரைக்குமான முதலீட்டுக்கான வட்டி விகிதம், 8 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 180 நாள்கள் முதல் ஒரு ஆண்டுக்கும் குறைவான முதலீடுகளுக்கு வட்டி விகிதம் 8.75 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஒரு ஆண்டு முதல் மற்றும் 5 ஆண்டுகள் வரையிலான முதலீடுகளுக்கான வட்டி விகிதம் பொதுமக்களுக்கு 9.25 சதவீதத்தில் இருந்து 9.50 சதவீதமாகவும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 9.50 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரையிலான முதலீட்டுக்கான வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 9.25 சதவீதத்தில் இருந்து 9.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதங்கள், ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.