முகப்பு
செய்திகள்

88 ஆண்டுகளாகத் தோல்வியே சந்திக்காத பிரேசில்..! வினிசியஸ் ஜூனியருக்கு ரசிகர்கள் நன்றி!

கால்பந்து உலகக் கோப்பையில் பிரேசில் அணி நிகழ்திய சாதனை குறித்து...

Updated On : 14 ஜூன் 2026, 2:42 pm IST
கோல் அடித்த மகிழ்ச்சியில் வினிசியஸ் ஜூனியர் (7), உடன் சக வீரர் புருனோ கிமரேஸ் (8). - படம்: ஏபி
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இதுவரை 88 ஆண்டுகளாகத் தோல்வியே சந்திக்காத அணியாக பிரேசில் சாதனை படைத்துள்ளது.

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் 1930 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் 1930, 1934ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் முதல் போட்டிகளில் பிரேசில் தோல்வியுற்றுள்ளன.

உலகக் கோப்பை 1938ல் போலந்து அணியை பிரேசில் கூடுதல் நேரத்தில் 6-5 என வீழ்த்தியது. அன்றுமுதல் இதுவரை முதல் போட்டியில் தோல்வியுற்றதே இல்லை என்ற பெருமையை பிரேசில் தன்வசம் வைத்துள்ளது.

Advertisement

Advertisement

இன்று அதிகாலை இந்திய நேரப்படி 3.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டியில் பிரேசிலும் மொராக்காவும் மோதின. இந்தப் போட்டியின் 21ஆவது நிமிஷத்தில் மொராக்கோவின் இஸ்மாயில் சைபாரி கோல் அடித்தார்.

அடுத்ததாக, 32ஆவது நிமிஷத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் வினிசியஸ் அற்புதமான கோல் அடித்து இந்தச் சாதனையை தொடர உதவினார். வினிசியஸ் ஜூனியருக்கு ரசிகர்கள் நன்றி கூறி வருகிறார்கள்.

உலகக் கோப்பை 1938க்குப் பிறகு 21 முதல்முறை போட்டிகளில் 17 வெற்றிகள் 4 சமனில் முடிந்துள்ளன. அடுத்தடுத்த போட்டிகளில் பிரேசில் ஹைதி, ஸ்காட்லந்து உடன் மோதுகின்றன.

summary

Brazil managed to extend its unbeaten 88 years streak in World Cup openers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.