அதிக உலகக் கோப்பைகளை வென்ற பீலே..! ஃபிஃபா வெளியிட்ட வைரல் விடியோ!
அதிக உலகக் கோப்பைகளை வென்ற கால்பந்து வீரர் குறித்து...
அதிகமுறை உலகக் கோப்பைகளை வென்ற ஒரே வீரராக பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் பீலே இருக்கிறார். இவரது விடியோவை ஃபிஃபா உலகக் கோப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
நடப்பு கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.
முதல்முறையாக இந்தப் போட்டிகள் 3 நாடுகளிலும் நடைபெற இருக்கின்றன. அத்துடன் 48 அணிகள் முதல்முறையாக பங்கேற்கின்றன. இதில் 891 வீரர்கள் அறிமுகமாகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இதுவரை ஐந்து உலகக் கோப்பைகளை வென்று பிரேசில் அணி முதலிடத்தில் இருக்கிறது. இதில், பீலே மூன்று முறை (1958, 1962, 1970) வெல்லும்போதும் அணியில் பங்காற்றியுள்ளார். அதனால்தான் அவரை பிரேசிலின் அரசன் எனப் புகழ்கிறார்கள்.
இந்த நிலையில், ஃபிஃபா உலகக் கோப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் அதிக முறை உலகக் கோப்பை வென்ற வீரருக்கு விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தது. இந்த விடியோ வைரலாகி வருகிறது.
சமீபத்தில் பீலேவின் மெழுகுச் சிலை ரியோ டி ஜெனிரோவில் திறக்கப்பட்டது. தற்போது, பீலேவுக்கு நிகராக நெய்மர் கொண்டாடப்பட்டு வருகிறார்.
காயத்திலிருந்து குணமடைந்துவரும் நெய்மருக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்பதால், கோப்பை வெல்வதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
More fifa world cup then any player is brazil legends O Rei aka Pele
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.