முகப்பு
வணிகம்

நோக்கியாவின் லூமியா-625 இந்தியாவில் அறிமுகம்

லூமியா ரக ஸ்மார்ட்போன்களில் புதிய மாடலான 625-ஐ நோக்கியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:28 pm IST
பகிர்:

லூமியா ரக ஸ்மார்ட்போன்களில் புதிய மாடலான 625-ஐ நோக்கியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

புது தில்லியில் லூமியா-625 செல்போனை வியாழக்கிழமை அறிமுகம் செய்து நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநர் வி.ஓசா பேசியது: நோக்கியாவின் லூமியா மாடல் விற்பனையைப் பொருத்தவரையில், உலக அளவில் முக்கியமான மூன்று நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கடந்த பதினெட்டு மாதங்களில் 12 லூமியா மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம்.லூமியா வாடிக்கையாளர்கள் 18 முதல் 25 வயதுள்ள இளைஞர்கள். லூமியா-925 மாடலின் விலை ரூ. 33,499 ஆகும். லூமியா ரக போன்களில் முன்னணி மாடல் இதுதான்.

புதிதாக அறிமுகமாகியுள்ள லூமியா-625 மாடலின் விலை ரூ. 19,999 ஆகும். இந்த மாடல் அடுத்த மூன்று நான்கு நாட்களில் நாடு முழுவதும் கிடைக்கும். இதிலுள்ள 4.7 அங்குல எல்.சி.டி. திரையில் நேரடியாக சூரிய ஒளிபட்டாலும் கூட, திரையில் உள்ள காட்சி தெளிவாகத் தெரியும். கையுறை அணிந்திருந்தாலும் விரல் நகத்தைப் பயன்படுத்தினாலும் இதன் தொடுதிரை சரியாக செயல்படும். ஒரு அப்ளிகேஷன் மூலமாக, ரூ. 4,275 மதிப்பிலான திரைப்படங்களை இலவசமாக அளிக்கிறோம் என்றார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.