வர்த்தகம்

சாதகமற்ற உலக நிலவரங்களால் சென்செக்ஸ் 407 புள்ளிகள் வீழ்ச்சி

DIN

சாதகமற்ற உலக நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இறுதியில் சென்செக்ஸ் 407 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதனால், பணவீக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக, பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்களிடையே பரவலாக எழுந்துள்ளது. இது, அமெரிக்கா மட்டுமின்றி இதர உலக நாடுகளின் பங்கு வர்த்தகத்தையும் தலைகீழாக புரட்டிப் போட்டு வருகிறது.
முதலீட்டாளர்கள் வங்கித் துறை பங்குகளை லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததையடுத்து அத்துறையின் குறியீட்டெண் 1.75 சதவீதமும், நிதி 1.54 சதவீதமும், தொலைத் தொடர்பு 1.15 சதவீதமும் சரிந்தது.
அதேசமயம், உலோகம், ரியல் எஸ்டேட், மின்சாரம் மற்றும் நுகர்வோர் சாதன துறை குறியீட்டெண்கள் ஏற்றம் பெற்றன.
யெஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி பங்குகளின் விலை முறையே 2.84 சதவீதம் மற்றும் 2.33 சதவீதம் சரிந்தன. இவை தவிர, ஹெச்டிஎஃப்சி நிறுவனம், இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, விப்ரோ, மாருதி சுஸூகி, என்டிபிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலையும் 2.13 சதவீதம் வரை சரிவைக் கண்டன.
அதேசமயம், டாடா ஸ்டீல், ஏஷியன் பெயின்ட், டாக்டர் ரெட்டீஸ், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் கோல் இந்தியா பங்குகளின் விலை 1.83 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 407 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 34,005 புள்ளிகளில் நிலைத்தது. ஜனவரி 4 க்குப் பிறகு சென்செக்ஸ் இந்த அளவுக்கு சரிந்தது இது முதல் முறை.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 121 புள்ளிகள் குறைந்து 10,454 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT