வர்த்தகம்

இன்டஸ்இண்ட் வங்கி லாபம் ரூ.936 கோடி

DIN

தனியார் துறையைச் சேர்ந்த இன்டஸ்இண்ட் வங்கி டிசம்பர் காலாண்டில் ரூ.936.25 கோடி நிகர லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு வியாழக்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இன்டஸ்இண்ட் வங்கி நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ரூ.5,473.54 கோடி மொத்த வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.4,716.13 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 16.05 சதவீதம் அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.750.64 கோடியிலிருந்து 25 சதவீதம் அதிகரித்து ரூ.936.25 கோடியானது. நிகர வட்டி வருமானம் 4 சதவீதத்திலிருந்து சற்று குறைந்து 3.99 சதவீதமாக காணப்பட்டது. 
வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 0.94 சதவீதத்திலிருந்து அதிகரித்து 1.16 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 0.39 சதவீதத்திலிருந்து உயர்ந்து 0.46 சதவீதமாகவும் இருந்தது என இன்டஸ்இண்ட் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT