வர்த்தகம்

சௌத் இந்தியன் வங்கி மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு அறிமுகம்

DIN

தனியார் துறையைச் சேர்ந்த சௌத் இந்தியன் வங்கி மூத்த குடிமக்களுக்காக 'எஸ்ஐபி எலைட் சீனியர் மற்றும் மகிளா எலைட்' என்ற இரு புதிய சேமிப்பு கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த சேமிப்பு கணக்குகளைத் தொடங்கலாம். இவ்வகை கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை, நகரங்களுக்கு ரூ.5,000-ஆகவும், கிராமங்களுக்கு ரூ.2,500-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.199 ஆண்டு பிரிமீயத்தில் தனிநபர் விபத்து காப்பீடு வசதியை பெறலாம். பெட்டக வசதி கோரும் மூத்த குடிமக்களுக்கு முதல் ஆண்டு வாடகையில் 25 சதவீத தள்ளுபடி சலுகையும் உண்டு. 
மேலும், சேமிப்பு கணக்குகளில் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை வைத்துள்ள மூத்த குடிமக்களின் இல்லம் தேடிச் சென்று மாதத்துக்கு இரண்டு முறை இலவசமாக வங்கிச் சேவை வழங்கப்படும் என்று சௌத் இந்தியன் வங்கி அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT