வர்த்தகம்

வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு

ANI

2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதியை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   

2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வருமான வரி தாக்கல் செய்வது தொடர்பாக புது விண்ணப்ப முறையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனால் வரி தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் காலக்கெடுவை நீட்டித்து அறிவிக்குமாறும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான  இறுதி நாள் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  அதற்குப் பிறகு அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வருமான வரித் துறை எச்சரித்து இருந்தது.

அதுமட்டுமின்றி குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தவறும்பட்சத்தில் அதற்குரிய காலகட்டத்தில் ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் என்று அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்ட வரி செலுத்துபவர்களுக்கு இந்த அபராதத் தொகை ஆயிரம் ரூபாயாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஜூலை 31-ஆம் தேதி காலக்கெடுவாக தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT