வர்த்தகம்

இருசக்கர வாகன விற்பனை: ஹீரோவை நெருங்கியது ஹோண்டா

தினமணி

இந்தியாவின் இருசக்கர வாகனச் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனையை, அதன் முன்னாள் கூட்டாளியான ஜப்பானின் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நெருங்கியுள்ளது. இவ்விரு நிறுவனங்களுக்கிடையிலான ஏப்ரல் மாத விற்பனை வித்தியாசம் வெறும் 12,134 வாகனங்கள் மட்டுமே.
 அந்த மாதத்தில், 6.81 லட்சம் ஹோண்டா இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய 2017-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், இது 18 சதவீத வளர்ச்சியாகும்.
 முதலிடத்தை வகிக்கும் ஹீரோ நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.94 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அந்த வகையில், தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கும், ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்துக்கும் இடையிலான விற்பனை இடைவெளி வெறும் 12,134 வாகனங்களாக சுருங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

அருணாசலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக!

டி20 உலகக் கோப்பை தொடரை வெல்லும் நம்பிக்கை உள்ளது: பாட் கம்மின்ஸ்

எதிர்க்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT