வர்த்தகம்

ஐசிஐசிஐ வங்கி தலைவரின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் மட்டுமே: ரிசர்வ் வங்கி

DIN


ஐசிஐசிஐ வங்கி தலைவர் பதவியில் சந்தீப் பக்ஷி மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடிக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. சந்தீப் பக்ஷி தலைவர் பதவியில் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என ஐசிஐசிஐ வங்கி கூறியிருந்த நிலையில் ரிசர்வ் வங்கி இவ்வாறு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
சந்தா கோச்சார் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஐசிஐசிஐ வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டார். அவர் அப்பதவியில் அக்டோபர் 15-ஆம் தேதியிலிருந்து மூன்றாண்டுகளுக்கு நீடிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது என ஐசிஐசிஐ வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஐசிஐசிஐ தலைவர் பதவியிலிருந்து சந்தா கோச்சார் விலகுவதாக கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அறிவித்தார். மேலும், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட வங்கியின் அனைத்து துணை நிறுவனங்களின் பொறுப்புகளிலிருந்தும் அவர் ராஜிநாமா செய்தார். 
சந்தா கோச்சாரின் பதவி விலகலையடுத்து புதிய தலைவராக சந்தீப் பக்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். 
அவர், வரும் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 3 வரையில் ஐந்தாண்டுகளுக்கு அப்பதவியில் நீடிப்பார் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்திருந்தது.
கடந்த சில மாதங்களாக வங்கி துறை சார்பான நியமனங்களில் ரிசர்வ் வங்கி முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை கடைபிடித்து வருகிறது. இந்த சூழலில், சந்தீப் பக்ஷியின் நியமனத்துக்கு மூன்றாண்டுகளுக்கு மட்டுமே ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT