வர்த்தகம்

நெஸ்லே லாபம் ரூ.446 கோடியாக உயர்வு

DIN

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நெஸ்லே இந்தியா நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.446.11 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 
கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.343.17 கோடியுடன் ஒப்பிடும்போது இது 29.99 சதவீதம் அதிகமாகும். இதே கால கட்டத்தில் நிகர அளவிலான விற்பனை ரூ.2,500.97 கோடியிலிருந்து 16.84 சதவீதம் உயர்ந்து ரூ.2,921.99 கோடியாக காணப்பட்டது.
நிறுவனத்தின் ஏற்றுமதி ரூ.159.02 கோடியிலிருந்து 7.86 சதவீதம் அதிகரித்து ரூ.172.49 கோடியாக காணப்பட்டது. நிறுவனத்தின் மொத்த செலவினம் இரண்டாவது காலாண்டில் 18 சதவீதம் உயர்ந்து ரூ.2,334.63 கோடியாக இருந்தது என நெஸ்லே தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

செவிலியா்களின் சேவைக்கு ஈடு இணை இல்லை

SCROLL FOR NEXT