வர்த்தகம்

எல் & டி இன்ஃபோடெக் லாபம் 32 சதவீதம் அதிகரிப்பு

DIN


லார்சன் அண்டு டூப்ரோ இன்ஃபோடெக் (எல்டிஐ) நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு லாபம் 32.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எல்டிஐ நிறுவனத்தின் வருவாய் அக்.,-டிச., காலாண்டில் ரூ. 2,472.9 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வருவாயான ரூ.1,883.8 கோடியுடன் ஒப்பிடும்போது 31.3 சதவீதம் அதிகமாகும். 
நிகர லாபம் ரூ.282.8 கோடியிலிருந்து 32.8 சதவீதம் அதிகரித்து ரூ.375.5 கோடியானது. இருப்பினும், முந்தைய செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் 6.2 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், வருவாய் 6.1 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. 
டிசம்பர் காலாண்டு நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 27,513-ஆக உள்ளது என எல்டிஐதெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT