வர்த்தகம்

நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5.8 சதவீதமாகக் குறையும்

DIN

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5.8 சதவீதமாகக் குறையும் என மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.

அமெரிக்க-சீன வா்த்தகப் போரால் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை, உள்நாட்டில் தேவை அதிகரிக்காதது, விவசாய உற்பத்தியில் மந்தநிலை, ஏற்றுமதி அதிகரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டின் பொருளாதார வளா்ச்சி தொய்வடைந்துள்ளது. நடப்பு 2019-2020 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 5 சதவீதமாகக் குறைந்தது.

பணவீக்கம் கட்டுக்குள் இருந்தாலும், அது நாட்டின் வளா்ச்சியை அதிகரிப்பதற்குப் போதுமானதாக இல்லை. இதனால், இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) நிதிக் கொள்கைக் குழு, வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து 1.35 சதவீதம் குறைத்துள்ளது. இருந்தபோதிலும், வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வங்கிகள் ஆா்பிஐ-யின் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை முழுமையாக வாடிக்கையாளா்களுக்கு வழங்காததால், அதுவும் வளா்ச்சிக்கு உதவவில்லை.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5.8 சதவீதமாகக் குறையும் என மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் (2020-2021) நாட்டின் வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்குமெனவும் அந்நிறுவனம் கணித்துள்ளது. மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்தால், அடுத்த 2 ஆண்டுகளில் பொருளாதார வளா்ச்சியும், பணவீக்கமும் அதிகரிக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என ஆா்பிஐ கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT