வர்த்தகம்

கடன்பத்திரம் மூலம் ரூ.3,000 கோடி மூலதனம்: எச்.டி.எஃப்.சி நிறுவனம் திட்டம்

DIN


எச்.டி.எஃப்.சி நிறுவனம் கடன்பத்திரங்கள் மூலம் ரூ.3,000 கோடியை திரட்டிக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் தெரிவித்துள்ளதாவது: நீண்ட கால அடிப்படையிலான முதலீட்டை திரட்டிக் கொள்ளும் வகையில் எச்.டி.எஃப்.சி நிறுவனம் கடன்பத்திரங்களை வெளியிடவுள்ளது . தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் இந்த கடன்பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். பாதுகாப்பான- மீட்கக்கூடிய வகையிலான, பங்குகளாக மாற்ற இயலாத இந்த கடன்பத்திர வெளியீட்டின் மூலமாக  ரூ.2,000 கோடி முதல் ரூ.3,000 கோடி வரையில் மூலதனம் திரட்டிக் கொள்ளப்படும்.
இந்த தொகை, நிறுவனத்தின் வீட்டு வசதி கடனுக்கான நிதியளிப்பு அல்லது மறுநிதியளிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று எச்.டி.எஃப்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT