வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 42,857 கோடி டாலராக சரிவு

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 42,857 கோடி டாலராக (ரூ.30 லட்சம் கோடி) குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது: அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 39 கோடி டாலர் குறைந்து 42,857 கோடி டாலராக இருந்தது. 
அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள வெளிநாட்டு கரன்ஸி மற்றும் தங்க சொத்துகளின் சரிவு காரணமாக இந்த நிலை ஏற்பட்டது. 
இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 65 கோடி டாலர் சரிந்து 42,896 கோடி டாலராக காணப்பட்டது. கணக்கீட்டு வாரத்தில் அந்நிய கரன்ஸி சொத்துகள் 12.5 கோடி டாலர் குறைந்து 39,667 கோடி டாலரானது. 
அதேபோன்று கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பும் 25.9 கோடி டாலர் சரிந்து 2,784 கோடி டாலராக இருந்தது. தொடர்ந்து இரண்டாவது வாரமாக தங்கத்தின் மதிப்பு சரிவைச் சந்தித்தது.
சர்வதேச நிதியத்தில், எஸ்டிஆர் 30 லட்சம் டாலர் அதிகரித்து 143 கோடி டாலராகவும்;  நாட்டின் கையிருப்பு நிலை 60 லட்சம் டாலர் குறைந்து 362 கோடி டாலராகவும் காணப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பானது நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் வரலாற்றில் முதல் முறையாக 43,057 கோடி டாலரைத் தொட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT