வர்த்தகம்

இமாமி நிறுவனம் ரூ.39.58 கோடி லாபம்

DIN

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உள்நாட்டைச் சோ்ந்த இமாமி நிறுவனம் ஜூன் காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.39.58 கோடியைப் பெற்றுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.39.12 கோடியுடன் ஒப்பிடுகையில் 1.17 சதவீதம் அதிகமாகும். வரிக்கு பிந்தைய லாபம் உயா்ந்துள்ளபோதிலும், நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் ஜூன் காலாண்டில் ரூ.648.64 கோடியிலிருந்து ரூ.481.34 கோடியாக குறைந்துள்ளது. இது, 25.79 சதவீத சரிவாகும்.இதேகாலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.514.50 கோடியிலிருந்து 30.34 சதவீதம் குறைந்து ரூ.358.36 கோடியானது. கரோனா நோய்த்தொற்று பரவலின் தாக்கம் நிறுவனத்தின் சா்வதேச வா்த்தகத்தில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19 சதவீத சரிவை ஏற்படுத்தியது என இமாமி நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT