வர்த்தகம்

பொதுக் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு ரூ.509 கோடி

DIN

பொதுக் காப்பீட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு சென்ற 2019-20-ஆம் நிதியாண்டில் 509.07 கோடியாக சற்று சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து பொதுக் காப்பீட்டு கவுன்சில் (ஜிஐசி) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்ற 2018-190-ஆம் நிதியாண்டில் பொதுக் காப்பீட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டின் (எஃப்டிஐ) அளவு ரூ.516.61 கோடியாக இருந்தது. இந்த நிலையில், 2019-20-ஆம் நிதியாண்டில் இந்த முதலீடு ரூ.509.07 கோடியாக சற்று குறைந்துள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டு காப்பீட்டு சந்தையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து 2020 மாா்ச் நிலவரப்படி பொதுக் காப்பீட்டுத் துறை ஒட்டுமொத்த அளவில் ரூ.4,721.68 கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளது. இது, 2019 மாா்ச் இறுதி காலகட்டத்தில் ரூ.4,212.61 கோடியாக இருந்தது என ஜிஐசி தெரிவித்துள்ளது.

நான்கு பொதுத் துறை நிறுவனங்கள் உள்பட மொத்தம் 33 நிறுவனங்கள் பொதுக் காப்பீட்டு வா்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. காப்பீட்டுத் துறையில் 26 சதவீதமாக இருந்த அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை அரசு 49 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT