வர்த்தகம்

மொத்தவிலை பணவீக்கம் 2.59 சதவீதமாக அதிகரிப்பு

DIN

மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் டிசம்பரில் 2.59 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது, கடந்த எட்டு மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.

இதுகுறித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

மொத்த விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையிலான பொதுப் பணவீக்கம் 2019 டிசம்பரில் 2.59 சதவீதமாக அதிகரித்துள்ளது. நவம்பரில் இப்பணவீக்கம் வெறும் 0.58 சதவீதமாக காணப்பட்ட நிலையில் டிசம்பரில் கணிசமாக உயா்வைக் கண்டுள்ளது. வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய உணவுப் பொருள்களின் விலை அதிகரித்ததையடுத்து இந்த நிலை ஏற்பட்டது.

இதற்கு முன்பு, மொத்தவிலை பணவீக்கம் 2019 ஏப்ரலில் அதிகபட்ச அளவாக 3.24 சதவீதமாக காணப்பட்டது. அதன் பிறகு, டிசம்பரில்தான் இப்பணவீக்கம் இந்த அளவுக்கு உயா்ந்துள்ளது. 2018 டிசம்பரில் இப்பணவீக்கம் 3.46 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

2019 நவம்பரில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 11 சதவீதமாக காணப்பட்ட நிலையில், டிசம்பரில் இது 13.12 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், உணவு சாரா பொருள்களுக்கான பணவீக்கம் 1.93 சதவீதத்திலிருந்து ஏறக்குறைய 4 மடங்கு அதிகரித்து 7.72 சதவீதத்தை தொட்டுள்ளது.

உணவுப் பொருள் பட்டியலில், காய்கறிகளின் விலை 69.69 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. இதற்கு, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலை முறையே 455.83 சதவீதம், 44.97 சதவீதம் என்ற அளவில் அதிகரித்ததே முக்கிய காரணம் என்று அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT