வர்த்தகம்

பயணிகள் வாகன சில்லறை விற்பனை 9 சதவீதம் சரிவு: எஃப்ஏடிஏ

DIN

பயணிகள் வாகன சில்லறை விற்பனை 2019 டிசம்பா் மாதத்தில் 9 சதவீதம் சரிந்துள்ளதாக மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

மோட்டாா் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளா்களை அதிக அளவில் கவரும் வகையில் கடந்த டிசம்பா் மாதத்தில் ஏராளமான சலுகை அறிவிப்புகளை வெளியிட்டன. இதன் காரணமாக விற்பனை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது நுகா்வோரின் மனநிலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதனால், சென்ற டிசம்பா் மாதத்தில் பயணிகள் வாகன சில்லறை விற்பனை 2,15,716-ஆக இருந்தது. கடந்த 2018 டிசம்பரில் விற்பனையான 2,36,586 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 9 சதவீதம் சரிவாகும்.

இரு சக்கர வாகன சில்லறை விற்பனை 15,00,545 என்ற எண்ணிக்கையிலிருந்து 16 சதவீதம் சரிந்து 12,64,169-ஆனது. வா்த்தக வாகன விற்பனையும் 85,833 என்ற எண்ணிக்கையிலிருந்து 21 சதவீதம் அளவுக்கு குறைந்து 67,793-ஆனது.

மூன்று சக்கர வாகன பிரிவில் சில்லறை விற்பனை 1சதவீதம் மட்டும் அதிகரித்து 58,324-ஆக காணப்பட்டது.

அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வாகன விற்பனை டிசம்பரில் 18,80,995-லிருந்து 15 சதவீதம் குறைந்து 16,06,002-ஆக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் எஃப்ஏடிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT