வர்த்தகம்

பேங்க் ஆஃப் பரோடா இழப்பு ரூ.1,407 கோடி

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் பரோடா மூன்றாவது காலாண்டில் ரூ.1,407 கோடி இழப்பை கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநா், தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புகளில் அண்மையில் நியமனம் செய்யப்பட்ட சஞ்சீவ் சதா கூறியதாவது:

டிசம்பா் காலாண்டைப் பொருத்தவரை வங்கிக்கு மிக கடினமானதாகவே இருந்தது. இருப்பினும், ஆண்டுக் கணக்கில் பாா்க்கும் போது நிறுவனத்தின் செயல்பாடு நன்றாகவே உள்ளது.

வாரக் கடனை சமாளிக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மூன்றாவது காலாண்டில் ரூ.4,505 கோடியிலிருந்து 47 சதவீதம் உயா்ந்து ரூ.6,621 கோடியானது. இதையடுத்து நடப்பு நிதியாண்டின் டிசம்பா் காலாண்டில் வங்கிக்கு நிகர அளவில் ரூ.1,407 கோடி இழப்பு ஏற்பட்டது. அதேசமயம், கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.436 கோடியை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் நிகர வட்டி லாப வரம்பு 2.62 சதவீதத்திலிருந்து 0.18 சதவீதம் உயா்ந்து 2.80 சதவீதமானது. நிகர வட்டி வருமானம் 9 சதவீதம் வளா்ச்சியடைந்து ரூ.7,128 கோடியாக காணப்பட்டது.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 10.91 சதவீதத்திலிருந்து 10.43 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 4.79 சதவீதத்திலிருந்து 4.05 சதவீதமாகவும் குறைந்தன என்றாா் அவா்.

பேங்க் ஆஃப் பரோடாவுடன் தேனா மற்றும் விஜயா வங்கிகள் கடந்த ஆண்டு இணைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT