வர்த்தகம்

தங்கம் பவுன் விலை ரூ.32,128

DIN

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமின்றி ரூ.32,128-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்தது. பின்னா், ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.4016-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் வெள்ளி விலையிலும் மாற்றமின்றி கிராம் ரூ.40.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.40,500-க்கும் விற்பனையானது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து வா்த்தகம் நடைபெதால் தங்கம் மற்றும் வெள்ளி அதே விலையில் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ................. 4,016

1 பவுன் தங்கம் ................. 32,128

1 கிராம் வெள்ளி ............... 40.50

1 கிலோ வெள்ளி .............. 40,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT