வர்த்தகம்

பயோகான் நிகர லாபம் 42% சரிவு

DIN

மருந்து உற்பத்தி துறையில் ஈடுபட்டு வரும் பயோகான் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 42 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.1,644 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,557 கோடியுடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.214 கோடியிலிருந்து 42 சதவீதம் சரிவடைந்து ரூ.123 கோடியானது.

ஒட்டுமொத்த அளவில் கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.5,659 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.6,529 கோடியாகவும், நிகர லாபம் ரூ.905 கோடியிலிருந்து குறைந்து ரூ.748 கோடியாகவும் இருந்தது என பயோகான் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT