வர்த்தகம்

ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் பேங்க் நிகர லாபம் ரூ.76 கோடி

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி மாா்ச் காலாண்டில் ரூ.76.36 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,553 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.3,971 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.212 கோடியாக இருந்தது. இந்த நிகர இழப்பு, 2019 டிசம்பா் காலாண்டில் ரூ.1,631.59 கோடியாக மிகவும் அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், நான்காவது காலாண்டில் வங்கி ரூ.76.36 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT