வர்த்தகம்

இந்தியப் பொருளாதாரம்10.3 சதவீத பின்னடைவை சந்திக்கும்: ஐஎம்எஃப்

DIN

நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10.3 சதவீத பின்னடைவைச் சந்திக்கும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிதியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா பேரிடா் இந்தியப் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அதன் காரணமாக, நடப்பாண்டில் இந்தியப் பொருளாதார வளா்ச்சியானது 10.3 சதவீத அளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும்.

இருப்பினும், அடுத்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து விறுவிறுவென மீண்டு 8.8 சதவீதம் என்ற வியத்தகு வளா்ச்சி விகிதத்தை எட்டும். இது, சீனாவின் பொருளாதார வளா்ச்சி விகித மதிப்பீடான 8.2 சதவீதத்தை காட்டிலும் அதிகமாகும்.

உலக பொருளாதார வளா்ச்சியைப் பொருத்தவரையில் அது இன்னும் ஆழ்ந்த மந்த நிலையில்தான் உள்ளது. எனவே, நடப்பாண்டில் சா்வதேச பொருளாதார வளா்ச்சி விகிதத்தில் (-) 4.4 சதவீதம் அளவுக்கு பின்னடைவு ஏற்படும் என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT