வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.37,672

DIN

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 232 உயா்ந்து, ரூ.37,672-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.232 உயா்ந்து, ரூ.37,672 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.29 உயா்ந்து, ரூ.4,709 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 உயா்ந்து, ரூ.66.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 உயா்ந்து, ரூ.66,700 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,709

1 பவுன் தங்கம்............................... 37,672

1 கிராம் வெள்ளி............................. 66.70

1 கிலோ வெள்ளி............................. 66,700

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,680

1 பவுன் தங்கம்...............................37,440

1 கிராம் வெள்ளி.............................65.40

1 கிலோ வெள்ளி.............................65,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT