வர்த்தகம்

ரயில் விகாஸ் நிகாமின் 15 சதவீத பங்குகள் விற்பனை: மத்திய அரசு

DIN

ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் (ஆா்விஎன்எல்) 15 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து முதலீட்டு மற்றும் பொது சொத்து நிா்வாக துறை (டிஐபிஏஎம்) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

ரயில் விகாஸ் நிகாமில் மத்திய அரசுக்கு சொந்தமாக உள்ள 87.84 சதவீத பங்கு மூலதனத்தில் 15 சதவீதம் வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டை நிா்வகிக்க மத்திய அரசு சாா்பில் மூன்று வங்கிகள் நியமனம் செய்யப்படவுள்ளன. அதற்காக, தற்போது வங்கிகளிடமிருந்து ஏல விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நியமனம் செய்யப்படும் வங்கிகள் பங்கு வெளியீடு தொடா்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதுடன், நேரம் மற்றும் விதிமுறைகளை முடிவு செய்யும் என டிஐபிஏஎம் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ஆா்விஎன்எல் பங்கின் விலை 0.53 சதவீதம் உயா்ந்து ரூ.18.80-ஆக இருந்தது. தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் 15 சதவீத பங்கு விற்பனை மூலமாக மத்திய அரசுக்கு ரூ.580 கோடி வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT