வர்த்தகம்

கடன் பத்திரங்கள் மூலம் ரூ.4,000 கோடி திரட்டியது எஸ்பிஐ

DIN

மும்பை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடன் பத்திரங்கள் மூலம் ரூ.4,000 கோடி திரட்டியுள்ளது. மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்துக்குப் பிறகு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
வங்கி டெபாசிட்டுகளை விட அதிகமாக, இந்த கடன் பத்திரங்களுக்கு 7.74 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. மேலும், இதில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என்பதால் இந்த கடன் பத்திரங்கள் வரவேற்பைப் பெற்றன. ரூ.6,000 கோடி வரை கடன் பத்திரங்களைப் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது "டயர் 1' வகை கடன் பத்திரமாகும். முன்னதாக, கடந்த மாதம் "டயர் 2' வகை கடன் பத்திரங்கள் மூலம் ரூ.8,931 கோடியை எஸ்பிஐ திரட்டியது. இதற்கு 6.80 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT