டிசம்பரில் எரிபொருள் தேவையில் விறுவிறுப்பு
இந்தியாவின் எரிபொருள் தேவை கடந்த டிசம்பரில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது.
இந்தியாவின் எரிபொருள் தேவை கடந்த டிசம்பரில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டில் எரிபொருளுக்கான தேவை தொடா்ந்து நான்காவது மாதமாக டிசம்பரிலும் விறுவிறுப்பைக் கண்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதை சுட்டிக் காட்டும் வகையில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு எரிபொருள் நுகா்வு டிசம்பரில் அதிகரிப்பைக் கண்டுள்ளது. இருப்பினும், இது கரோனா பாதிப்புக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் 2 சதவீதம் குறைவாகும்.
Advertisement
Advertisement
2019 டிசம்பரில் 1.89 கோடி டன்னாக காணப்பட்ட பெட்ரோலியப் பொருள்களுக்கான தேவை 2020 டிசம்பரில் 1.86 கோடி டன்னாக குறைந்துள்ளது.
அதேசமயம், நவம்பரில் இதற்கான தேவை 1.78 கோடி டன்னாக காணப்பட்டது என அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.