வாஷிங்டனில் புயல் அபாயம்! தள்ளிப்போகிறதா டிரம்ப்பின் உரை?
250-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் டிரம்ப் ஆற்றவிருந்த உரை தள்ளிப்போகிறதா என்பது பற்றி...
வாஷிங்டனில் புயல் காரணமாக 250-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆற்றவிருந்த உரை தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டம் வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் கொண்டாட திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்வின் போது வாஷிங்டனில் ஏற்பட்ட தீவிர புயல் அபாயம் காரணமாக டொனால்ட் டிரம்ப்பின் திட்டமிடப்பட்ட உரை மற்றும் அணிவகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்த மோசமான வானிலை காரணமாக அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
புயல்கள் எந்தவொரு நிகழ்வுக்கும் அதிருஷ்டத்தைக் கொண்டு வருகின்றன. அவை நிகழ்வுகளை மேலும் சிறிது சுவாரஸ்யமாக்குகின்றன. நாங்கள் காத்திருப்போம், அது அதிகாலை 2 மணியாக இருந்தாலும் சரி, அல்லது இன்னும் ஒரு மணி நேரத்தில் நடந்தாலும் சரி, எனக்குக் கவலையில்லை.
புயல் கடந்து விடும் என்று நம்புகிறேன். ஏற்கெனவே, ஒரு வரலாற்று நிகழ்வு தொடங்குவதற்கு முன்னர் நூறு சதவிகிதம் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு துளி மழைகூட பெய்யவில்லை. ஆகவே புயல் நம் நிகழ்வை தடுத்து நிறுத்தப் போவதில்லை.
ஒரு சிறு மழை நமது 250வது ஆண்டு விழாவைத் தடுத்து நிறுத்த நான் அனுமதிக்கப் போவதில்லை. எனவே நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறேன் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நிகழ்வு அரங்கில் கூடியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால் நிகழ்வு நடைபெறுமா? அல்லது மக்கள் இல்லாமல் டிரம்ப் மட்டும் தனது உரையை ஆற்றுவாரா? என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
The speech Trump was scheduled to deliver at the 250th Independence Day celebrations in Washington is expected to be delayed due to a storm.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.