முகப்பு
தமிழ்நாடு

முருகனின் ஆறாவது படைவீடு! பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலையில் இன்று காலை வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது.

Updated On : 5 ஜூலை 2026, 8:31 am IST
பழமுதிர்சோலையில் குடமுழுக்கு - யூடியூப்
பகிர்:

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலையில் இன்று காலை வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது.

மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோயில் மலையில் முருகப்பெருமானின் பழமுதிர்சோலை அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்பாலிக்கும் ஒரே தலம் பழமுதிர்சோலை மட்டுமே.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் குடமுழுக்கு நடத்த கடந்த சில மாதங்களாக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனிடையே, ஜூன் 30 ஆம் தேதியில் மஹா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள், கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று காலை (ஆனி 21 - ஜூலை 5) சுமார் 6 மணியளவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

கோவில் நிர்வாகத்தினரும், இந்து சமய அறநிலையத் துறையினரும் இணைந்து கோயில் குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

கோயில் குடமுழுக்கு விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். மேலும், இந்த விழாவில் அமைச்சர் நிர்மல் குமாரும் கலந்து கொண்டார்.

குடமுழுக்கு விழாவில் பக்தர்களின் கூட்டத்தை வழிநடத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

summary

The Maha Kumbabishekam of the renowned Pazhamudircholai Solaimalai Murugan Temple, is being held today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments