வர்த்தகம்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக இருக்கும்: இக்ரா

DIN

இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு மற்றும் வரும் நிதியாண்டுகளில் 9 சதவீதமாகவே நீடிக்கும் என தரமதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சி 20.1 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் அதன் வளா்ச்சி விகிதம் 8.4 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது.

இதனிடையே ஒமைக்ரான் பரவல் சா்வதேச நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொள்ளும்போது, நடப்பு 2021-22 மற்றும் வரும் 2022-2023-ஆம் இரு நிதியாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9 சதவீதமாகவே நீடிக்கும் என்றே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என இக்ரா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT