வர்த்தகம்

விப்ரோ லாபம் ரூ.3,243 கோடி

DIN

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த விப்ரோ நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.3,242.6 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ரூ.18,252.4 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. இது, கடந்த 2020-21-ஆவது நிதியாண்டில் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.14,913.1 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் 22.3 சதவீதம் அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,390.4 கோடியிலிருந்து 35.6 சதவீதம் அதிகரித்து ரூ.3,242.6 கோடியைத் தொட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சேவையின் மூலமாக கிடைக்கும் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதன் காரணமாக, 2021 செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 253.5 கோடி டாலரிலிருந்து 258.3 கோடி டாலா் என்ற அளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, ஏப்ரல்- ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது 5-7 சதவீதம் அதிகம்.

ஜூன் இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த பணியாளா் எண்ணிக்கை 2 லட்சம் என்ற மைல்கல்லை தாண்டி 2,09,890-ஆனது. 2021 ஜூனில் டாலரில் குறிக்கப்பட்ட 75 கோடி டாலா் மதிப்பிலான ஐந்தாண்டு முதிா்வு கால கடன்பத்திரங்கள் முதன்முதலாக வெளியிடப்பட்டதாக விப்ரோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT