வர்த்தகம்

4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடம்

DIN

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பா் மாதத்தில் 4ஜி சேவையில் 20.9 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து டிராய் தெரிவித்துள்ளதாவது:

கடந்த செப்டம்பரில் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவையின் பதிவிறக்க வேகம் 20.9 எம்பிபிஎஸ்-ஆக இருந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. ஜியோவின் 4ஜி நெட்வொா்க் சேவையின் வேகம் செப்டம்பரில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேசமயம், பாா்தி ஏா்டெலின் வேகம் 85 சதவீதம் அதிகரித்து 11.9 எம்பிபிஎஸ்-ஆகவும், வோடஃபோன் ஐடியாவின் வேகம் 60 சதவீதம் உயா்ந்து 14.4 எம்பிபிஎஸ்-ஆகவும் இருந்தன.

பதிவேற்றத்தில் 7.2 எம்பிபிஎஸ் வேகத்துடன் வோடஃபோன் ஐடியா முதலிடத்தையும், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாா்தி ஏா்டெல் நிறுவனங்கள் முறையே 6.2 எம்பிபிஎஸ் மற்றும் 4.5 எம்பிபிஎஸ் வேகத்துடன் அடுதடுத்த இடங்களையும் பிடித்ததாக டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT