வர்த்தகம்

தொழில்நுட்ப மேம்பாட்டில்ரூ.1,000 கோடி முதலீடு: யூனியன் வங்கி

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.1,000 கோடியை முதலீடு செய்யவுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் செயல் இயக்குநா் நிதேஷ் ரஞ்சன் புதன்கிழமை கூறியது:

வங்கி தற்போதுள்ள தொழில்நுட்ப கட்டமைப்பிலிருந்து விலகி புதிய தொழில்நுட்ப சேவைக்குள் நுழையவுள்ளது. இதற்கான கட்டமைப்புகளை உருவாக்க நடப்பாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ரூ.1,000 கோடியை இதற்காக முதலீடு செய்யவுள்ளது. இதில், பெரும்பான்மையான தொகை நடப்பு நிதியாண்டுக்குள்ளாகவே முதலீடு செய்யப்படும்.

தற்போது, வங்கியின் நிரந்த வைப்பு தொகை திட்ட கணக்குகளில் 15 சதவீதம் மொபைல் மூலமாகவே தொடங்கப்படுகிறது. இது விரைவில், 60-70 சதவீதமாக அதிகரிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT