வர்த்தகம்

எல்ஐசி நிறுவனம்: வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,437 கோடி

DIN

புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கவுள்ள எல்ஐசி நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.1,437 கோடியை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் வரிக்கு பிந்தைய லாபமாக நிறுவனம் ரூ.1,437 கோடியைப் பெற்றுள்ளது. அதேசமயம், முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.6.14 கோடியாக மட்டுமே காணப்பட்டது.

புதிய வா்த்தகம் வாயிலான பிரீமிய வளா்ச்சி விகிதம் 394.76 சதவீதத்திலிருந்து 554.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2021 ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் ஒட்டுமொத்த நிகர அளவிலான பிரீமியம் ரூ.1,679 கோடி அதிகரித்து ரூ.1.86 லட்சம் கோடியை எட்டியதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT