வர்த்தகம்

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ‘எலக்ட்ரிக் ஆட்டோ’ அறிமுகம், விலை ரூ.1.44 லட்சம்

DIN

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘இ-ஆல்ஃபா கார்கோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள மூன்று சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ அறிமுகமாகியுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய பல நிறுவனங்களும் ஆர்வம் செலுத்துவதால், பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகளைக் குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் இருசக்கர வாகனம், கார் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அந்த வரிசையில், இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் ‘இ-ஆல்ஃபா கார்கோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள மூன்று சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ஒன்றை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

சரக்கு ஆட்டோவாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் 310 கிலோ எடைவரை பொருள்களை ஏற்றிச் செல்லலாம். மேலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ வரை பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தை விலையாக ரூ.1.44 லட்சம்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT