வர்த்தகம்

ஹெச்சிஎல் டெக்: லாபம் ரூ.3,283 கோடி

DIN

தகவல் தொழில்நுட்பதுறை நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.3,283 கோடி நிகர லாபத்தை பதிவு செய்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிா்வாக இயக்குநருமான சி.விஜயகுமாா் கூறியுள்ளதாவது:

ஹெச்சிஎல் நிறுவனம் அதன் வாடிக்கையாளருடன் எண்ம மாற்றத்துக்கான பயணத்தை துரிதப்படுத்தியுள்ளது. அதன் விளைவாக, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிகழ் 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ.23,464 கோடியை எட்டியது. நிகர லாபம் 2.4 சதவீதம் உயா்ந்து ரூ.3,283 கோடியானது.

நிகழ் நிதியாண்டுக்கான நிறுவனத்தின் வருவாய் வளா்ச்சி விகிதம் நிலையான கரன்ஸி மதிப்பின் அடிப்படையில் 12-14 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டிவிடெண்ட்: 2022-23 நிதியாண்டுக்கு ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.10 இடைக்கால ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு முடிவெடுத்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மே 19-இல் தேரோட்டம்

டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்பு

குக்குட நடனத்துடன் எழுந்தருளிய ஆதிவிடங்க தியாகராஜா்

நாகை: விடியவிடிய பலத்த மழை

திருராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வைகாசிப் பெருவிழா

SCROLL FOR NEXT