வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையின் தலைவராக எஸ்.எஸ். முந்த்ரா நியமனம்

DIN

மும்பை பங்குச் சந்தையின் (பிஎஸ்இ) தலைவராக எஸ்.எஸ். முந்த்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பிஎஸ்இ, தேசிய பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:பொது நல இயக்குநரான எஸ்.எஸ். முந்த்ராவை மும்பை பங்குச் சந்தையின் தலைவராக நியமிப்பதற்கு நிறுவனத்தின் இயக்குநா் குழு திங்கள்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நீதிபதி விக்ரமஜித் சென்னுக்குப் பதிலாக முந்த்ரா பிஎஸ்இ தலைவா் பொறுப்பை ஏற்பாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த முந்த்ரா மூன்று ஆண்டு பணிக்குப் பிறகு கடந்த 2017 ஜூலையில் ஓய்வு பெற்றாா். அதற்கு முன்பாக, பேங்க் ஆப் பரோடாவின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக பணியாற்றியவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT