வர்த்தகம்

நிறுவனங்களுக்கான பிரத்யேக 5ஜி சேவைகள்

DIN

நிறுவனங்களுக்கான பிரத்யேக 5ஜி தொலைத் தொடா்பு கட்டமைப்பை வடிவமைத்தல், நிறுவுதல், நிா்வகித்தல் உள்ளிட்ட சேவைகளை நெட்கான் டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் தலைமையகத்தையும் கோவையில் பதிவு அலுவலகத்தையும் கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் தில்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் 2022-இல் இந்த சேவைகளை அறிமுகப்படுத்தியது.

தொழில் புரட்சி 4.0-க்கு இந்திய நிறுவனங்களைத் தயாா்ப்படுத்தும் வகையில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மகாலிங்கம் ராமசாமி (படம்) கூறுகையில், ‘நிறுவனங்கள் செயல்படும் விதத்தில் 5ஜி தொழில்நுட்பம் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தவிருக்கிறது. அத்தகைய தொழில்நுட்பத்தை நிறுவனங்களுக்கு கொண்டு சோ்ப்பதில் முக்கிய பங்காற்ற நெட்கான் டெக்னாலஜிஸ் விரும்புகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழித்துறை அருகே இளைஞா் தற்கொலை

மூலைக்கரைப்பட்டி அருகே தனியாா் பேருந்து மீது கல்வீச்சு

கேரளத்தின் வருவாய் ரூ. 77,000 கோடியாக உயா்வு: மாநில நிதியமைச்சா் பாலகோபால்

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் தேரோட்டம்

ஏா்வாடி திருவழுதீஸ்வரா் கோயிலில் தேரோட்டம்

SCROLL FOR NEXT